அய்யர் வீட்டு ரூசியான புளியோதரை செய்வது எப்படி ?

Summary: நம் முன்னோர்கள் சாப்பாட்டிற்காக பெரும்பாலும் புளியோதரை தான் கட்டி எடுத்துக் கொண்டு போவார்கள் இதனால் இதற்கு கட்டுச் சோறு என்ற பெயரை வந்தது. ஏனென்றால் புளியோதரை எளிதில் கெட்டுப் போய் விடாது இவ்வளவு மகத்துவம் வாய்ந்த புளியோதரை அய்யர் வீடுகளில் விசேஷமாக செய்வார்கள். இன்றைய தொகுப்பு அய்யர் வீட்டு புளியோதரை செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • எண்ணெய்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 100 கிராம் புளி
  • 2 tbsp எள்
  • 2 tbsp கடலை பருப்பு
  • 2 tbsp உளுந்தம் பருப்பு
  • 1 tbsp சீரகம்
  • ½ tbsp மிளகு
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp வெந்தயம்
  • 1 கை பிடி நிலக்கடலை
  • ¼ tbsp வெல்லம்
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • பெருங்காயம்
  • உப்பு
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் புளியோதரைக்கு தேவையான சோற்றை முதலிலே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்துள்ள எள்ளை கடாயில் போட்டு நன்கு வறுக்கவும். பின் இதனுடன் வரமிளகாய், உளுந்தம் பருப்பு, கடுகு, கடலை பருப்பு, சீரகம், வெந்தயம் போன்றவற்றையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
  2. பின் அனைத்து பொருட்களும் பொன் நிறமாக வரும் வரை வறுத்து. வறுத்தப் பொருட்களை மிக்ஸி ஜாரில் எடுத்து குளிர்ந்த பின் திருதிருவனே பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  3. பின்பு எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வந்தவுடன் மஞ்சள் தூள் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பின்பு ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் துருவி தேங்காய்யை போட்டு வறுக்கவும். சிவப்பு நிறமாக வரும் வரை வறுத்து ஒரு பவுளில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. பின்பு பெரிய கடாயில் நம்மிடம் உள்ள புளியை கரைத்து தண்ணீரை கடாயில் ஊற்றி அதன்பின் வெல்லம் மற்றும் சிறிது பெருங்காயத் தூளை சேர்த்து நன்கு கிளரி விடவும். இன்னொரு மூன்று நிமிடம் கழித்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு.
  6. நாம் வறுத்து அரைத்த பொருட்களையும் இதனோடு சேர்த்து. அதன் பின் பவுளில் எடுத்து வைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள்.
  7. பின்பு ஒரு மூன்று நிமிடம் கழித்து கடை இறக்கி விடுங்கள் பெரிய பாத்திரத்தில் தயார் செய்துள்ள சோற்றை போட்டு சிறிது சிறிதாக நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளியோதரை மசாலாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அவ்வளவுதான் ருசியான அய்யர் வீட்டு புளியோதரை இனிதே தயாராகிவிட்டது.