Summary: தினமும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது யோசிக்காமல் வெங்காய சட்னி செய்து பாருங்கள் அனைவர்க்கும் பிடிக்கும்
Ingredients:
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
½ கப் சின்னவெங்காயம்
5 சிவப்பு மிளகாய்
உப்பு
புளி
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
¼ டேபிள் ஸ்பூன் கடுகு
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
2 சிவப்பு மிளகாய்
கருவேப்பிலை
Steps:
ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் 5 சிவப்புமிளகாய், ½ கப் சின்ன வெங்காயம், சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
வதக்கிய பிறகு அதை மிக்சியில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் ¼ டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 2 சிவப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாக தாளித்து அதில் சிறிதளவு கருவேப்பிலை சேக்கவும்.
பின்பு தலித்ததில் அரைத்த சட்னியை சேர்த்து கலந்து விடவும்.