தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆகையால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும்.

Ingredients:

  • 6 வர மிளகாய்
  • ¼ tbsp கல் உப்பு
  • புளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பெரிய தக்காளி
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • 1 டம்பளர் தண்ணீர்
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் சட்னி தயாரிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன் ஒரு ஆறு வர மிளகாயை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் நம் உறவை வைத்து வர மிளகாய், கால் டீஸ்பூன் கல் உப்பு மற்றும் நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து திருதிருவன அரைத்துக் கொள்ளவும்.
  2. அதன் பின்பு இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் நான்கு பல் பூண்டு சேர்த்து மையாக அரைத்து பின் ஒரு பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதை மிக்ஸி ஜாரில் ஒரு இரண்டு பெரிய தக்காளியை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காய தூள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
  4. பின் இதனுடன் நாம் முதலில் வரமிளகாய், வெங்காயம் சேர்த்து அரைத்த விழுதை கடாயில் சேர்த்து ஒரு 10 வினாடிகள் நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள் அதன் பின்பு நாம் அரைத்து தக்காளி பேஸ்ட்டையும் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
  5. அதன் பின் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி சட்னியை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான தட்டு கடை காரசாரமான தண்ணீர் கார சட்னி தயாராகிவிட்டது