இட்லி தோசைக்கு ஏற்ற கிராமத்து ஸ்டைல் சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று சதா ஒரே பொருட்களை வைத்து சட்னி செய்து போர் அடித்து போனவர்கள் சற்று வித்தியாசமாக கொள்ளுப் பருப்பு வைத்து இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க, இந்த சட்னி இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். .

Ingredients:

  • 1 cup கொள்ளுப் பருப்பு
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 tbsp உளுத்தம் பருப்பு
  • 1 cup துருவியது தேங்காய்
  • புளி சிறிது
  • 2 பூண்டு
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. கொள்ளுப் பருப்பு சட்னி செய்ய முதலில் கொள்ளுப் பருப்பை எடுத்து கொண்டு, கடாயை சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு சிறிது வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் அதே கடாயில் எண்ணெய் காய்ந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கொள்ளுப் பருப்பு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய் துருவல், நெல்லிக்காய் அளவு புளி, பூண்டு, தேவைக்கேற்ப உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கொஞ்சமாக தண்ணீர் விட்டுக் கரகரப்பாக அரைக்கவும். இப்போது சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி ரெடி.