காரசாரமான சிக்கன் பார்லி சூப் இப்படி ஒரு தரம் செஞ்சி சுவைத்து பாருங்க!

Summary: உடல் நல்ல வலுடன் மாறவும் இந்த சிக்கன் பார்லி சூப்பை அடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவையான சிக்கன் பார்லி சூப் எப்படி வீட்டில் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சிக்கன் பார்லி சூப் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup பார்லி அரிசி
  • 1 cup போன்லெஸ் சிக்கன்
  • 1 cup கேரட்
  • 1 cup ப்ரோக்கோலி
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 பூண்டு
  • 3 இஞ்சி
  • 1 tbsp மிளகு தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. சிக்கன் பார்லி சூப் செய்ய முதலில் பார்லி அரிசியை களைந்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.
  2. பின்னர், காடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  3. அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கியதும், கேரட், ப்ரோக்கோலி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும். 
  5. இந்த செய்முறைக்கு, உங்கள் பார்லியை முன்கூட்டியே ஊறவைக்க தேவையில்லை; அது சூப்பிற்குள் போதுமான அளவு சமைத்து விரிவடையும். சூப் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து பறிமாரலாம்.