நெல்லை ஸ்பெஷல் சுவையான சுரைக்காய் பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தானஇருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் ஏற்படும்பொழுது நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. சுரைக்காய் பிரியாணி செய்து சாப்பிடலாம், மிகவும் ஆரோக்கியமானவை. இந்த சுரைக்காய் புரதம், வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. சுரைக்காய் கூட்டு ,பருப்பு கூட்டு, அல்வா, கீர் போன்ற இனிப்பு மற்றும் காரமான உணவு வகைகளை சுரைக்காய் கொண்டு செய்யலாம். இதனை தயிர் பச்சடி மற்றும் சட்னி வகைகளுடன் வைத்து சாப்பிடலாம்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சுரைக்காய் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்

Ingredients:

  • ½ kg பிரியாணி அரிசி
  • ¼ kg சுரைக்காய்
  • 2 பிரிஞ்சி இலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • tsp இஞ்சி பூண்டு விழுது
  • ¼ tsp சோம்பு
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • ½ tsp மஞ்சள் தூள்
  • ½ tsp மிளகாய்த்தூள்
  • ½ tsp மல்லித்தூள்
  • 1 tbsp கடலைப்பருப்பு
  • 110 கறிவேப்பிலை
  • 3 tbsp நெய்
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கரண்டி

Steps:

  1. சுரைக்காய் பிரியாணி செய்ய முதலில் அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
  2. பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய சுரைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். சுரைக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் அரிசியையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  3. தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். 
  4. இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, கடலை பருப்பை வறுக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து வறுத்த முந்திரி, கடலைப்பருப்பு சேர்த்து சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம்.