காரசாரமான சுவையில் மினி பெப்பர் இட்லி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: இட்லி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு உணவு இட்லி தான். இட்லி பிடிக்காதவர்கள் கூட இட்லியை இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மினி பெப்பர் இட்லி மிகவும் எளிதான மற்றும் பிரபலமான காலை உணவு மற்றும் டிஃபின் பொருளாகும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மினி பெப்பர் இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 15 மினி இட்லி
  • 1 வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1 tsp கரம் மசாலா
  • 10 gm கொத்தமல்லி இலை
  • 1 tsp மிளகு
  • ½ tsp சோம்பு
  • 5 பூண்டு
  • 10 கறிவேப்பிலை
  • 3 tbsp தேங்காய் எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. மினி பெப்பர் இட்லி செய்வதற்கு முதலில் இட்லி மாவை இட்லி பாத்திரத்தில் உள்ள இட்லி தட்டுகளில் ஊற்றி, மினி இட்லிகளாக சுட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். 
  3. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும், அதில் குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் மினி இட்லிகளை சேர்த்து, சிறிது நீரை தெளித்துக் கிளறவும்சுவையான மினி பெப்பர் இட்லி தயார்