சூப்பரான சுவையில் நாகூர் ஃபர்நி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: இனிப்பு என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் குறிப்பாக கடைகளில் விற்கப்படும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது, நாகூர் ஃபர்நி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 cup சம்பா ரவை
  • 3 cup தண்ணீர்
  • 55 ml பால்
  • 2 cup சீனி
  • 3 tbsp மில்க் மேடு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் குக்கரில் தண்ணீர் ஊற்றி சம்பா ரவையை மூன்று விசில் கொண்டு வேக வைக்க வேண்டும்.
  2. பத்து நிமிடம் மிதமான தீயை வைக்க வேண்டும்.
  3. பின்னர் சம்பா ரவையை சிறிது சிறிதாக பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  4. சீனியை சேர்க்க வேண்டும்.மில்க் மெய்ட் ஊற்ற வேண்டும். இப்பொழுது சுவையான நாகூர் ஃபிர்நி தயார்.