நாவில் எச்சி ஊறும் சுவையான ஜவ்வரிசி பொங்கல் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் என்றாலே அவ்வளவு பிடிக்கும். அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொங்கல் தான். அந்த வகையில் ஒரு முறை இப்படி ஜவ்வரிசியில் பொங்கல் செய்து பாருங்களே அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.அதை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Ingredients:

  • 300 கிராம் ஜவ்வரிசி
  • 200 கிராம் வெல்லம்
  • 200 மி.லி பால்
  • 50 கிராம் நெய்
  • 10 முந்திரி
  • 5 காய்ந்த திராட்சை
  • 5 ஏலக்காய்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஜவ்வரிசியை போடவும்.
  2. ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஏலக்காய், வெல்லம் நன்கு தட்டி அதில் போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு கிளறவும்.
  3. ஜவ்வரிசி கெட்டி பதத்திற்கு வந்ததும் பால் மற்றும் நெய் சேர்க்கவும்.
  4. அடுத்து ஒரு காடையை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வதக்கி ஜவ்வரிசில் போடவும்.
  5. இப்பொழுது சுவையான ஜவ்வரிசி பொங்கல் தயார்.