நாவிற்கு ருசியான பச்சை ஆப்பிள் சட்னி! இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: சட்னி வைத்து தோசை சாப்பிட்டீங்களா பல வகையான சட்னி வைத்து சாப்பிடலாம் ஆனா பழங்களை வைத்து சாப்பிடலாமா அப்படி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது சட்னி செய்து சாப்பிட்டால் அதன் சுவை ஆஹா அமோகம் மிக அருமையாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பச்சை ஆப்பிள் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 பச்சை ஆப்பிள்
  • 4 வற்றல் மிளகாய்
  • 1 tsp கடலைப்பருப்பு
  • 1 வெங்காயம்
  • 10 கறிவேப்பிலை
  • புளி
  • தேவையான அளவு உப்பு
  • ¼ tsp கடுகு
  • உளுந்துப்பருப்பு
  • 10 கறிவேப்பிலை
  • 1 வற்றல் மிளகாய்
  • 2 tbsp எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. பச்சை ஆப்பிள் சட்னி செய்ய முதலில் பச்சை ஆப்பிளை கழவி தயாராக வைத்துக்கொள்ளவும்.
  2. ஆப்பிள், வெங்காயம் இரண்டும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
  3. வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள எல்லா பொருட்களும் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைக்கவும்.
  4. வறுத்து வைத்துள்ள பொருட்கள் சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து, புளி, உப்பு சேர்த்து சட்னி அரைத்து எடுக்கவும்.
  5. அரைத்த சட்னியை பரிமாறும் பௌலுக்கு மாற்றி, தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வற்றல் தாளித்து சேர்த்தால் சுவையான ஆப்பிள் சட்னி சுவைக்கத்தயார்.
  6. சுவையான இந்த ஆப்பிள் சட்னி சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.