காரசாரமான சுவையில் வெஜிடபுள் ரோல் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: இனி கடைகளில் அல்லது வீட்டிலேயே நாவிற்கு விருந்தளிக்கும் வெஜிடபுள் ரோல் செய்து பாருங்கள்.இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு சுவை உண்டு,. மேலும் இந்தியர்களாகிய நாம் தெருவோர கடைகளில் தின்பண்டங்களை உண்பதும் ,அதை ருசிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆனால், சுகாதாரம் தான் மிகப்பெரிய கவலையாக இருக்கும் என்று நினைக்கும் போது அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெஜிடபுள் ரோல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 cup உருளைக்கிழங்கு
  • ½ cup காலிஃப்ளவர்
  • 2 பெரிய வெங்காயம்
  • ½ cup காரட்
  • ½ cup பச்சைப் பட்டாணி
  • 2 tbsp பட்டர் பீன்ஸ்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 tsp இஞ்சி
  • 11 cup கோதுமை மாவு
  • 1 tsp உளுத்தம் பருப்பு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 11 பெரிய பவுள்

Steps:

  1. வெஜிடபுள் ரோல் செய்வதற்கு முதலில் காரட்டை துருவி வைக்கவும். பிறகு வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு காலிஃப்ளவரை உதிர்த்து வைக்கவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. பிறகு உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். பிறகு காரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ் மற்றும் காலிஃப்ளவரை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, அதில் மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கி, அதனுடன் காய்கறிக் கலவையை சேர்த்துக் கிளறவும்.
  6. பிறகு அதனுடன் சீஸ் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். பிறகு கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து, சற்று கனமான பெரிய சப்பாத்தியாக செய்து வைக்கவும்.
  7. அதன் பிறகு சப்பாத்தியின் மீது காய்கறி கலவையை பரவலாக வைக்கவும். பிறகு சப்பாத்தியை ரோல் செய்து, நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  8. அதன் பின் கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, நறுக்கி வைத்த ரோல்களின் இரண்டு பக்கங்களையும் நன்றாக மூடவும்.
  9. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயார் செய்துள்ள ரோல்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வெஜிடபுள் ரோல் தயார்.