காரசாரமான சுவையில் காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி ?

Summary: காலிஃப்ளவர் சில்லி மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு ரோட்டு ஓர கடைகளில் பெரும்பாலும் நாம் காலிஃப்ளவர் சில்லி வாங்கி சாப்பிடுவோம் இல்லை என்றால் எப்போதாவது நம் வீடுகளில் செய்து சாப்பிடுவோம் ஆனால் வீடுகளில் நாம் பெரும்பாலும் செய்வது கிடையாது. ஏனென்றால் காலிஃபிளவர் சில்லி பக்குவமாக வைக்க தெரியாது ஆகையால் கடைகளில் விற்பனையாகும் அந்த காலிபிளவர் சில்லியை எப்படி நம்மளும் அதை போல் வீட்டில் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். இதை மாலை நேரங்களில் உங்கள் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆக நீங்கள் கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் அதே நேரம் சுகாதாரமானதாக இருக்கும்.

Ingredients:

  • 300 கிராம் காலிஃபிளவர்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp மல்லி தூள்
  • ½ tbsp சீரகத் தூள்
  • 1 ½ tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 சிட்டிகை கலர் பொடி
  • 3 tbsp தக்காளி சாஸ்
  • ½ tbsp சோயா சாஸ்
  • ½ tbsp மிளகு தூள்
  • 1 tbsp உப்பு
  • 1 கப் சோளமாவு
  • தண்ணீர்
  • எண்ணெய்
  • 2 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு 300 கிராம் அளவிலான மீடியம் சைஸ் காலிஃபிளவரை வாங்கி சிறுசிறு துண்டுகளாக எடுத்து கொள்ளுங்கள். அதன் பின்பு இரண்டு முறை தண்ணீரில் நன்கு அலசி கழுவி கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து வந்தவுடன் நம் வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளை அதனுடன் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு தண்ணீரை வடிகட்டி காலிஃபிளவர் துண்டுகளை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு. பின்பு ஒரு பெரிய பவுளில் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகாய் தூள், அரை டீஸ்பூன் மல்லித்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள், 1/2 டீஸ்பூன் உப்பு ஒன்றரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
  4. ஒரு சிட்டிகை கலர் பொடி, மூன்று டீஸ்பூன் தக்காளி சாஸ், அரை டீஸ்பூன் சோயா சாஸ், அரை டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கடைசியாக ஒரு கப் அளவு சோளம் மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  5. பின் இதனுடன் கெட்டியான பதத்திற்கு வருமாரு சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின் 20 நிமிடங்கள் காலிஃபிளவரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்.
  6. சிறிது சிறிதாக காலிஃப்ளவரை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் கடைசியாக இரண்டு கொத்து கருவேப்பிலையே எண்ணெயில் போட்டு எடுத்து அதையும் காலிபிளவர் சில்லி மீது தூவி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான காலிஃப்ளவர் சில்லி தயாராகிவிட்டது.