மழைக்கு இதமா சுட சுட பாதம் பால் செய்வது எப்படி ?

Summary: தற்சமயம் நிலவி வரும் சூழலில் மழை நேரங்களில் மழைக்கு இதமாக உங்களுக்கு சூடாக ஏதாவது குடிக்க தோன்றினாள் கண்டிப்பாக நீங்கள் இந்த பாதாம் பாலை சுட சுட செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி மிகவும் விரும்பி குடிப்பார்கள் அந்த அளவிற்கு இந்த பாதாம் பால் அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலும் உங்கள் வீட்டில் விருந்தினர்கள் வரும் பொழுது டீ காபி செய்து கொடுப்பதற்கு பதிலாக இந்த பாதாம் பால் செய்து கொடுக்கலாம்.

Ingredients:

  • ½ கப் பாதம் பருப்பு
  • ½ கப் பால்
  • 4 ஏலக்காய்
  • ¼ tsp குங்கும பூ
  • ¼ கப் தண்ணீர்
  • ¾ லிட்டர் பால்
  • ¼ கப் சர்க்கரை
  • ¼ tbsp மஞ்சள் தூள்

Equipemnts:

  • 1 டீ பாத்திரம்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் பாதாம் பால் செய்ய அரை கப் அளவிற்கு பாதாம் பருப்பு எடுத்துக் கொண்டு ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு சூடான நீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் ஊற வைத்த பாதாம் பருப்பின் மேற்புறத் தோலை நீக்கிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய பாதாம் பருப்பு, அரை கப் காய்ச்சி குளிர வைத்த பால், நான்கு ஏலக்காய் மற்றும் கால் டீஸ்பூன் அளவு குங்குமம் போல் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு தண்ணீர் மற்றும் முக்கால் லிட்டர் அளவு புல் கீரிம் பால் ஊற்றி நன்கு கொதிக்க வையுங்கள். பால் கொதித்து வந்ததும் தீயை மிதமாக ஏறிய விட்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு.
  4. அதன் பின் இதனுடன் கால் கப் அளவு சர்க்கரை மற்றும் மிக்ஸியில் அரைத்த பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் பாதாம் பாலை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு கடைசியாக கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளுங்கள். பின்ப இதனுடன் சிறிது உடைத்த பாதம், பிஸ்தா, முந்திரி பருப்பு சேர்த்து குடிக்க கொடுங்கள். அவ்வளவுதான் சுவையான பாதாம் பால் இனிதே தயாராகி விட்டது.