காரசாரமான சுவையில் சேமியா பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: சேமியா வைத்து செய்யப்படும் கேசரி சேமியா லட்டு இதுபோன்று பல செய்யலாம் ஆனால் சேமியா வைத்து அனைவரும் விரும்பக்கூடிய உணவுகளில் ஒன்றான பிரியாணி செய்ய முடியுமா செய்து பார்ப்போம் வாருங்கள்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கேரளா பச்சை சேமியா பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 250 gm சேமியா
  • 10 முந்திரி
  • 2 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 3 ஏலக்காய்
  • 1 பட்டை
  • 2 இலவங்கம்
  • 1 பிரியாணி இலை
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய்தூள்
  • 2 தக்காளி
  • 5 gm புதினா இலை
  • 20 gm கொத்தமல்லித்தழை
  • 50 gm கேரட்
  • 1100 gm பச்சைப்பட்டாணி
  • 3 tbsp நெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. சேமியா பிரியாணி செய்ய முதலில் ஒரு நான் ஸ்டிக் பேனில் எண்ணெய், 1டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து சிறிது வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. இதில் வேக வைத்த கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் சேமியா சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும்.
  4. மூடி சிம்மில் வைத்து வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். சேமியா வெந்தவுடன் நெய், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.