நாக்கை நாட்டியமாட வைக்கும் வெள்ளரிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் மோர் குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மோர் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இது மாதிரியாக நீங்கள் மோர் குழம்பு வைத்து மாதம் இருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்ததாக இருக்கும் மேலும் தினசரி மசால் நிறைந்த குழம்புகளை சாப்பிடும் அவர்களுக்கு ஒரு மாறுதலான உணவாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் தயிர்
  • ½ கப் வெள்ளரிக்காய்
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 tbsp கடலை பருப்பு
  • ½ tbsp சீரகம்
  • 2 சின்ன வெங்காயம்
  • இஞ்சி
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbsp உளுந்தம் பருப்பு
  • ½ tbsp கடுகு
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 2 கடாய்
  • 2 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் வெள்ளரிக்காய் பழத்தை நன்கு கழுவிக்கொண்டு துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெள்ளரிக்காயை சேடர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள்.
  2. பின் ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வைத்திற்கும் துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு, சிறிய இஞ்சி துண்டு என அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மை போல நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு வெள்ளரிக்காய் நன்கு வெந்திருக்கும் இந்நிலையில் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி விடவும் அடுத்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
  4. ஒரு இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு கடாயை இறக்கி ஆற வைத்து விடுங்கள். பின்பு வேற கடாயை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
  5. எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காயத்தூள், உளுந்தம் பருப்பு, வர மிளகாய், சிறிது கருவேப்பிலை சேர்த்து தாளித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின் நாம் வைத்துள்ள தயிரை எடுத்து கட்டி இல்லாமல் நன்றாக கடைந்து கொள்ளுங்கள். பின் கடைந்த தயிரை குழம்புடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பின் தாளித்த தாளிப்பையும் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான் சுவையான மோர் குழம்பு தயாராகிவிட்டது.