சுவையான ஆட்டு குடல் குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க ?

Summary: ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும். ஆம், இன்று ஆட்டின் குடல் பகுதியை வைத்து தான் இன்று குழம்பு செய்து பார்க்க போகிறோம். இந்த ஆட்டு குடல் குழம்பு நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உங்கள் குடல் குழம்புக்கு அடிமையாகி விடுவார்கள். மறுமுறையும் இந்த குடல் குழம்பை அடிக்கடி வைக்க சொல்லி உங்களை தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு இந்த குடல் குழம்பு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 KG ஆட்டு குடல்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp உப்பு
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ டம்பளர் தண்ணீர்
  • 1 மேசை கரண்டி எண்ணெய்
  • 200 கிராம் சின்ன வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 ½ tbsp சீரகம்
  • 1 tbsp மிளகு
  • 2 மேசை கரண்டி மல்லி தூள்
  • ¾ மேசை கரண்டி மிளகாய் தூள்
  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • ¼ tbsp சோம்பு
  • 7  சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 தக்காளி
  • வேக வைத்த குடல்
  • வறுத்து அரைத்த மசாலா
  • தண்ணீர்
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. ஆட்டுக்குடலை கடையில் வாங்கும் போதே நன்கு சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கி வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு வாங்கி வந்த ஆட்டுக்குடலை இரண்டு முறை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் 200 கிராம் சின்ன வெங்காயம், 7 பல் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வாங்கி வந்தவுடன் பொண்டாட்டி ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  3. பின் கடைசியாக அடுப்பு அனைத்து விட்டு இரண்டு மேசை கரண்டி மல்லித்தூள் மற்றும் முக்கால் மேசை கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கடாய் சூட்டிலேயே வறுத்துக் கொள்ளுங்கள். பின் நாம் வறத்த பொருட்களை குளிர வைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டும் மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கால் டீஸ்பூன் சோம்பு, 7 நறுக்கிய சின்ன வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  5. வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்து வந்தவுடன் இதனுடன் நாம் குக்கரில் வேகவைத்த குடலை அந்த தண்ணீருடன் சேர்த்து கிளறி விடுங்கள்.
  6. ஒரு நிமிடம் குடலை கிளறிவிட்டு வதக்கியவுடன் அதனுடன் நான் மிக்ஸியில் அரைத்த பேஸ்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின் குழம்பும் எண்னெயும் தனியாக பிரிந்து வந்தவுடன். கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள் சுவையான ஆட்டு குடல் குழம்பு தயாராகிவிட்டது.