சுவையான நீலகிரி சிக்கன் கிரேவி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: அசைவம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சிக்கன் ஆகும் அதிலும் பலவகையான சிக்கன் கிரேவிகள் சிக்கன் குழம்புகள் சிக்கன் பல செய்து நாம் சாப்பிட்டு மகிழ்வோம்.வழக்கமான சிக்கன் செய்து சாப்பிட்டு அனைவருக்கும் ஒரு மாற்றாக நீலகிரி ஸ்பெஷல் சிக்கன் செய்து சாப்பிடுங்கள், இது மிகவும் சுவையாக இருக்கும் இதனை ஈசியாக செய்யக்கூடியது குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நீலகிரி சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Ingredients:

  • 500 gm சிக்கன்
  • 1 வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 5 பூண்டு
  • 1 Tsp மல்லித்தூள்
  • 1 tsp சோம்புத்தூள்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 20 gm கொத்தமல்லி இலை
  • 5 gm புதினா
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. நீலகிரி சிக்கன் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவிய சிக்கனை அதில் போட்டு மல்லித்தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள் சேர்க்க வேண்டும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கனை 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் வறுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
  5. கலந்த சிக்கனை அதில் போட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
  6. பின் அரைத்த விழுதை சிக்கனில் போட்டு எண்ணெய் பிரியும் வரை சிக்கனை மூடி வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான நீலகிரி சிக்கன் தயார்.