ருசியான மற்றும் உதிரி உதிரியான குஸ்கா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான குஸ்கா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 cup பாஸ்மதி அரிசி
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 5 பச்சை மிளகாய்
  • 2 பிரியாணி இலை
  • 2 பட்டை,கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ cup தேங்காய் பால்
  • ¼ கட்டு புதினா,கொத்தமல்லி
  • 50 முந்திரி
  • 5 tbsp நெய்
  • 1 tbsp ரோஸ் வாட்டர்
  • 3 tbsp எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. குஸ்கா செய்ய முதலில் அரிசியினை நன்றாக அலசி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியினை நறுக்கி வைக்கவும்.
  2. பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும், பாத்திரத்தில் எண்ணெய் , நெய் ஊற்றி காய்ந்த பின்பு நறுக்கிய ஒரு வெங்காயத்தினை மட்டும் போட்டு நல்ல பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.
  3. பிறகு அதே எண்ணெயில் முந்திரியும் போட்டு பொறித்து எடுத்து தனியாக வைக்கவும். குக்கரில் பொறித்த எண்ணெயினை ஊற்றவும் அதில் ரம்பை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.
  4. அதில் நீட்டமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடி பிடிக்காமல் சிம்மில் வைத்து கலந்துவிடவும். பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பொடிசாக நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து கலந்துவிடவும். பிறகு அதில் தேங்காய் பால் , தண்ணீர் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும்.
  6. நன்றாக தண்ணீர் கொதிக்கும் பொழுது ஊறவைத்த அரிசியினை சேர்த்து கிண்டிவிட்டு குக்கரை மூடி ஒரு விசில் ஒரு விசில் லோவிலும் வைத்து அணைக்கவும்.
  7. 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து குஸ்காவின் மீது ரோஸ் வாட்டர் சுற்று வரை ஊற்றி மெதுவாக மரக்கரண்டி வைத்து கிண்டிவிடவும். இதனை அப்படியே வேற பவுலில் மாற்றி மேலே பொறித்து வைத்த வெங்காயம், முந்திரி போட்டு பரிமாரவும்.