வட இந்திய ஸ்டைல் தித்திக்கும் கார்ன் அப்பம் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானியம் சேர்த்த உணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். கார்ன் வைத்து மிக மிக சுலபமான சுவையாக பஞ்சு போல அப்பம் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். தோசை கல்லில் சாஃப்ட் ஆக கல்தோசை போல வார்த்து இதை சாப்பிடும் போது அவ்வளவு சுவை இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள சைவ கிரேவி அசைவ கிரேவி, குருமா என்று எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கார்ன் அப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 cup மைதா மாவு
  • 2 முட்டை
  • 2 tbsp பேக்கிங் பவுடர்
  • ½ cup சீனி
  • பின்ச் உப்பு
  • 1 cup தண்ணீர்
  • 1 cup பால்
  • 2 tbsp சோள எண்ணெய்
  • 1 டின் ஸ்வீட் கார்ன் க்ரீம்
  • ½ cup கஸ்டர்ட் மாவு
  • ½ cup பால்
  • 5 tbsp சீனி
  • 1 cup தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கார்ன் அப்பம் செய்ய முதலில் க்ரீம் செய்ய தேவைப்படும் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு கிண்ணத்தில் கலக்கவும்.
  2. இதனை மிதமான தீ யில் வைத்து காய்ச்சவும்.கொஞ்சம் கெட்டி பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து ஆர வைக்கவும்.
  3. ஆப்பம் செய்ய தேவைப்படும் அனைத்து பொருளை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. ஒரு நான் ஸ்டிக் பேனில், கலக்கிய மாவை ஒரு சிறிய அகப்பையில் மாவு ஊற்றி, மிதமான தீயில் வேக வைக்கவும்.
  5. அப்பம் வெந்ததும் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் செய்து வைத்த க்ரீம் வைத்து ஒன்றாக மடிக்கவும். சுவையான விதியாசமான ஸ்வீட் கார்ன் ஆப்பம் ரெடி..