விருதுநகர் சிக்கன் சுக்கா ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வார கடைசி நாட்கள் வந்தாலே என்ன அசைவம் செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இந்த ரெசிபி. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு பிடிக்கும். ஆனால் எப்பொழுதும் சிக்கன் கிரேவி, சிக்கன் கிளம்பு, சிக்கன் வறுவல் போன்று தான் வீட்டில் அதிகம் செய்வார்கள்.இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் சிக்கன் சுக்கா இனி வீட்டிலேயே சுலபமாகவும், அட்டகாசமான சுவையில் செய்து விடலாம்.இது போன்று சிக்கன் சுக்கா செய்து அதனுடன் சுட சுட சாதம் ரசம் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து அசத்துங்கள்.

Ingredients:

  • 1 கிலோ சிக்கன்
  • தயிர்
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 2 பிரிஞ்சி இலை
  • 5 கிராம்பு
  • 2 பட்டை
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 டீஸ்பூன் கல்பாசி
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 5 வரமிளகாய்
  • 5 முந்திரி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கசகசா
  • கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • எண்ணெய்
  • 1 பிரிஞ்சி இலை
  • கல் பாசி
  • 2 ஏலக்காய்
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 பெரியவெங்காயம்
  • கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • ½ டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கொத்தமல்லி இலை
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி ஒரு பௌலில் சேர்த்து அதில் தயிர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
  2. அடுத்து ஒரு பான் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, கல்பாசி, சேர்த்து அத்துடன் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, முந்திரி பருப்பு, கசகசா, சேர்த்து சிவக்க வறுத்து அத்துடன் கருவேப்பிலை இலை சேர்த்து தேங்காய் சேர்த்து வறுத்து சிவந்ததும், தனியாக எடுத்து ஆறவிடவும். ஆறியதும் மிக்சியில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, கல்பாசி, சோம்பு, ஏலக்காய், சேர்த்து நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  4. அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயில் வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த மசாலா விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு வேக விடவும்.
  6. சுக்கா பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து, மற்றும் எலுமிச்சை பழ சாறு சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.