காரசாசமான காளான் மஞ்சூரியன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: காளான் மஞ்சூரியன்…! டேஸ்ட் சும்மா அட்டகாசமா இருக்கும் காளான் மஞ்சூரியன் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு ஃபேவரட் ஸ்னாக்ஸ் இந்த காளான் மஞ்சூரியன் செய்ய. நீண்ட நேரம் காளான் மஞ்சூரியன் மொறு மொறுப்பாக இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ரெசிபி இதோ இந்த பதிவில் உங்களுக்காக. நீங்க காளான் மஞ்சூரியன் பிரியர்களாக இருந்தால், இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் மஞ்சூரியன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 300 gm காளான்
  • 2 tbsp மைதாமாவு
  • 2 tbsp அரிசி மாவு
  • 1 tbsp கார்ன் ப்ளோர்
  • புட் கலர்
  • 8 பூண்டு
  • 1 tbsp சில்லி சாஸ்
  • 1 tbsp சோயா சாஸ் –
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. காளான் மஞ்சூரியன் செய்ய முதலில் காளானை தண்ணீரில் அலசி, மெல்லிய காட்டன் துணியை வைத்து துடைத்தால் காளான் நல்ல வெண்மை யாக மாறிவிடும். சுத்தப்படுத்திய காளான், வெங்காயம், பூண்டு மூன்றையும் நறுக்கி வைக்க வேண்டும்.
  2. மைதாமாவு, அரிசிமாவு, கார்ன் ப்ளோர் மாவு மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காளான் துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
  5. கடுகு வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு 1 நிமிடம் கிளறவும்.
  6. பின்னர் அதனுடன் புட் கலர், சோயாசாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து எல்லாம் சேரும் வரை நன்றாக கிளறவும்.
  7. பொரித்து வைத்துள்ள காளானில் உப்பு சேர்த்திருப்பதால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  8. பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் மஞ்சூரியன் தயார்