முஸ்லீம் ஸ்டைல் மொஹல் சிக்கன் பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: மொஹல் சிக்கன் பிரியாணி என்பது முகலாய் உணவு வகைகளில் ஒன்றாகும், மேலும் இது நறுமணம், சுவை மற்றும் சுவைக்காக மிகவும் பிரபலமானது. இந்த பிரியாணியில் மசாலாப் பொருள்களை பயன்படுத்தப்பட்டது. இந்த சுவை நிறைந்த உணவு மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு அல்லது விருந்து உணவிற்கு ஏற்றது. மொஹல் சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மொஹல் சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 kg சிக்கன்
  • 1 kg பாஸ்மதி அரிசி
  • 4 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tbsp தயிர்
  • 1 tsp மஞ்சள்த்தூள்
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 6 பச்சை மிளகாய்
  • 2 பிரியாணி இலை
  • 2 பிரியாணி பூ
  • 4 tsp ஏலக்காய்
  • 2 tsp கிராம்பு
  • 1 tsp ஷாஜீரா
  • 1 tsp தனியாதூள்
  • 1 tsp சோம்புத்தூள்
  • 1 tsp சீரகத்தூள்
  • 1 tsp கரம் ம்சலாத்தூள்
  • ¼ tsp பூட் கலர் ஆரஞ்சு, சிகப்பு
  • 10 முந்திரி, திராச்சை
  • 3 tbsp நெய்
  • சிறிதுகொத்தமல்லி
  • 20 gm புதினா
  • 1 எலுமிச்சை
  • 1 tsp குங்குமப்பூ
  • தேவையான அளவு தண்ணீர்
  • 4 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கரண்டி

Steps:

  1. மொஹல் சிக்கன் பிரியாணி செய்ய முதலில் சிக்கனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் ,பச்சமிளகாய், பிரியாணி இலை, பிரியாணி பூ, ஏலக்காய் – கிராம்பு , ஷாஜீரா , தனியாதூள்சேர்க்க வேண்டும்.
  2. அதனுடன் சோம்புத்தூள், சீரகத்தூள், கரம் மசலாத்தூள், கொத்தமல்லி, புதினா ,உப்பு எல்லா பொருட்களிலும் மேலே சொன்ன அளவில் பாதி போட்டு 1/2 மணிநேரம் ஊற வைக்கவும். அரிசியினையும் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் , நெய் ஊற்றி நீட்டமாக அறிந்த வெங்கயத்தின் 1/4 பகுதியினை பொன்னிறமாக பொறிக்கவும். அதே எண்ணெயில் முந்திரி, திராச்சையினை பொரித்து எடுக்கவும். இதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
  4. அடிகணமான பாத்திரத்தில் பொறித்த எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்.பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் மிளகாய்த்தூள், தக்காளி, கொத்தமல்லி,புதினா போட்டு வதக்கவும்வதங்கிய பின்பு சிக்கன் கலவையினை போட்டு நன்றாக எண்ணெயில் பிரட்டி மூடி போட்டு வேகவிடவும்.
  5. வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பிரியாணி இலை, பூ , பச்சைமிளகாய், ஏலம், கிராம்பு, ஷாஜீரா, கொ.மல்லி, புதினா உப்பு போட்டு தண்ணீரை சூடு பண்ணவும்.
  6. கொதி வந்தபின்பு ஊற வைத்த அரிசியினை போடவும்..1/2பாகம் சாதமான பின்பு இதை தனியாக வடித்து வைக்கவும்.
  7. பின் சிக்கன் வெந்த பின்பு அதன் மேல் சாதத்தை போடவும்.ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் உற்றி கலர் கலந்து வைக்கவும்இதை சாதத்தின் மேல் சுற்றி வரை ஊற்றவும்.
  8. இதோடு எலுமிச்சைபழத்தை பிழிந்து விடவும்.அதன் மேல் மற்ற வெங்காயம், முந்திரி போட்டு சட்டியினை இருக்கமாக மூடி தம்மில் அடுப்பை சிம்மில் 20 நிமிடம் வைக்கவும்.மொஹல் சிக்கன் பிரியாணி தயார்