எண்ணெயில் வதக்கிய கார முட்டை ரெசிபியை டக்குனு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட கூட்டு இல்லாமல் சாப்பிடுவார்கள் ஆனால் குழந்தைகள். முட்டையை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டையை எண்ணெயில் வதக்கி இது போல் வித்தியாசமாக செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஈசியாக எண்ணெயில் வதக்கிய கார முட்டை செய்து விடலாம்.

Ingredients:

  • 3 முட்டை
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • 1 tbsp மிளகு தூள்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய தட்டு

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் முட்டை முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு ஒரு பெரிய பவுளில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அதில் வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி கலந்த மிளகாய் பொடியுடன் சேர்த்து பிரட்டி கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மசாலாவில் பிரட்டிய முட்டையை கடாயில் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  4. பின்பு முட்டை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கி எடுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் சிறிது கொத்தமல்லி மற்றும் மிளகு தூள் தூவி விடுங்கள்.
  5. அவ்வளவு தான் சுவையான எண்ணெயில் பொரித்த கார முட்டை தயாராகி விட்டது. இது போன்று செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாம்பிடுவார்கள்.