புத்துணர்ச்சி தரும் சுவையான கார்ன் முட்டை சூப் இப்படி ஒர தரம் செஞ்சி பாருங்க ஒரு முறை!

Summary: பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் மாலை நேரத்தில் டீ காபிக்கு பதிலாக இப்படி ஒரு சூப் வைத்துக் கொடுங்கள். அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாகவும் உடல் சோர்வு ஏற்படும், அல்லது வெகு தூரம் பிரயாணம் செய்து விட்டு திரும்பி வரும் பொழுது உடல் களைப்பாக இருக்கும்,. இப்படி உடல் சோர்வை சரி செய்வதற்காக நமது பாரம்பரிய முறைப்படி சூப் குடிப்பது வேண்டும். அவ்வாறு உடல் சோர்வை போக்க வல்ல ஒரு கார்ன் முட்டை சூப் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கார்ன் முட்டை சூப் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 500 gm மக்கா சோளம்
  • 2 tbsp சோள மாவு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 cup பால்
  • 1 வெஜிடபிள் ஸ்டாக் கியூப்
  • 1 tbsp பட்டர்
  • 1 tsp மிளகுப் பொடி
  • வெங்காயத் தாள்
  • 2 முட்டை
  • தேவையான அளவு தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கார்ன் முட்டை சூப் செய்ய முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  2. சோளத்தை வேகவைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
  3. ஒரு கைப்பிடி சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு மீதியை மிக்ஸியில் அரைத்து தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  4. இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் பட்டரைச் சூடாக்கி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பச்சை மிளகாய் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
  5. அதன் பின்னர் சிறுந்தீயில் வைத்து சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். சோள மாவை 2 மேசைக்கரண்டி பால் விட்டு கரைத்து விடவும்.
  6. இதனுடன் தனியாக எடுத்து வைத்துள்ள மக்காசோளத்தையும் சேர்த்து வதக்கவும். சூப் நன்கு கொதித்து வந்தவுடன் அதில் உப்பு, மிளகுப் பொடி உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் சேர்த்து நன்கு கலக்கவும்.
  7. சூப் நன்கு கொதித்தவுடன் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து, கொதி வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத் தாளை தூவி சூடாகப் பரிமாறலாம்.