புதுவிதமான சுவையுடன் வாழைப் பூ சப்பாத்தி செய்வது எப்படி ?

Summary: பொதுவாக நம் இரவு நேரங்களில் எண்ணெய் அதிகம் இல்லாத உணவுகள் அல்லது சப்பாத்தி போன்ற உணவுகளை உணவாக உட்கொள்ளுவோம். அதுவும் தொடர்ந்து ஒரே மாதிரியான வகையில் சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் நமக்கு சலித்து போய் விடும். அதற்காக சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்துவதற்கு பதிலாக வேறு வகையில் சப்பாத்தியை செய்து நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். நாம் இன்று வாழைப்பூவை வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். மேலும் தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்

Ingredients:

  • 50 கிராம் பாசிபருப்பு
  • 250 KG கோதுமை மாவு
  • 1 கப் வாழைப் பூ
  • 8 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • ½ tbsp சீரகம்
  • 2 tbsp தயிர்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 மாவு பிசைய அகல பாத்திரம்
  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 பூரிக்கட்டை

Steps:

  1. முதலில் வாழைப்பூவின் உள்ளிருக்கும் நாரை நீக்கிவிட்டு பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாசி பருப்பு சேர்த்து போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.
  2. பின்பு தண்ணீரை வடிகட்டி எடுத்துவிட்டு கடாயை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பு போட்டு அதனுடன் வாழைப் பூ, பூண்டு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  3. பின் நாம் சேர்த்துள்ள பொருட்களின் பச்சை வாடை போகும் வரை கிளறிவிட்டு நன்கு வதக்கவும்.பின் அனைத்தும் நன்றாக வதக்கியதும் கடாயை இறக்கி வைத்து விடுங்கள்.
  4. பின் நாம் வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு குளிர வைக்கவும். சிறிது நேரம் கழித்து பொருட்கள் குளிர்ந்த உடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மை போல் அரைத்துக் கொள்ளவும்.
  5. பின் அரைத்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, தயிர், உப்பு கலந்த தண்ணீர் போன்றவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  6. சப்பாத்தி மாவு தயாராகிய பின் வழக்கம் போல் உருண்டை பிடித்து பூரி கட்டையில் தேய்த்து கல்லில் போட்டு சப்பாத்தியா எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் வாழைப்பூ சப்பாத்தி இனிதே தயாராகி விட்டது.