கிராமத்து ஸ்டைல் சுவையான கொள்ளு பருப்பு கடையல் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வழக்கமான மதியம் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈஸியாக செய்யகூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொள்ளு பருப்பு கடைசல் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ cup கொள்ளுப் பயறு
  • 2 தக்காளி
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • ¼ tsp கடுகு
  • ½ tsp உளுத்தம் பருப்பு
  • 2 மிளகாய் வற்றல்
  • 1 வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கரண்டி

Steps:

  1. கொங்கு நாட்டு கொள்ளு பருப்பு கடைசல் செய்ய முதலில் கொள்ளு பயறை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. நன்றாக கழுவிய பின்னர் குக்கரில் தண்ணீர் ஊற்றி கொள்ளு, தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், கொத்தமல்லி, சீரகம், உப்புஆகியவற்றை சேர்த்து எட்டு விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு போட்டு மிளகாய் வற்றல்,வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
  4. குக்கரில் உள்ள கொள்ளு கடைசலில் தாளித்தவற்றை போட வேண்டும். பின் பருப்பு கடைசலை வைத்து கடைய வேண்டும். இப்பொழுது சத்தான கொள்ளு கடைசல் தயார்.