ஆலப்புழா தித்திக்கும் சுவையில் கருப்பட்டி வட்லப்பம் இப்படி ஒரு தரம செஞ்சி பாருங்க!

Summary: வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும் இது ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும் இது அங்கு வாழும் தமிழ் மக்களால் விரும்பி செய்யப்படும் ஒரு அற்புதமான உணவாகும் இது அனைத்து நல் விழாக்கள் தொடங்கும் முன் செய்து அனைவரும் உண்பார்கள் இதன் சுவை அமோகமாக இருக்கும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கருப்பட்டி வட்லப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup தேங்காய் பால்
  • 3 முட்டை
  • ½ cup கருப்பட்டி
  • 2 tbsp சீனி
  • உப்பு சிறிதளவு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கருப்பட்டி வட்லப்பம் செய்ய முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய்ச் சில்லை ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொண்டு முதல் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. முட்டையை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.பின் அடுப்பில் பாத்திரத்தில் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை சுட வைக்க வேண்டும்.
  3. பின்னர் தேங்காய்ப்பால், கருப்பட்டி கரைசல், அரைத்த சீனி எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொண்டு வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.
  4. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்று அதில் மேல் அட்லப்பா வைக்கும் பாத்திரம் முழுங்காதவாறு உருளை வடிவில் வைத்து அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும்.
  5. தண்ணீர் சூடானதும் அதில் பத்தை இந்த பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இப்பொழுது இட்லி பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். 25 நிமிடம் வட்லபத்தை வேகவிட வேண்டும்.
  6. வட்டிலப்பம் வெந்ததும் ஒரு கரண்டியால் வட்லபத்தை குத்தி எடுத்து பார்த்தால் கரண்டியில் வட்லப்பம் ஒட்டாமல் இருக்க வேண்டும். இப்பொழுது சுவையான கருப்பட்டி வட்டலப்பம் தயார்.