ருசியான கல்யாண வீட்டு பாசி பருப்பு பாயசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான பாசி பருப்பு பாயசம் செய்து சுவையாக உண்ணலாம். இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.

Ingredients:

  • 1 cup பாசிப்பருப்பு
  • ¼ cup முந்திரிப் பருப்பு
  • 1 cup வெல்லம்
  • ½ cup தண்ணீர்
  • 1 tsp ஏலக்காய் தூள்
  • 2 tsp நெய்
  • 1 cup தேங்காய்ப்பால்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. பாசிப்பருப்பு பாயாசம் செய்ய முதலில் ஒரு கடாயில் பாசிப்பருப்பை எண்ணெய் ஊற்றாமல் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு குக்கர் வறுத்த பாசிப்பருப்பை போட்டு அதில் 5 கப் அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் கொண்டு வேக வைக்க வேண்டும்.
  3. பின் வேறு கடாயில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. வெல்லத்தை பாகுபதம் காய்ச்சாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்.
  5. வேகவைத்த பாசிப்பருப்பில் வெல்லத்தை சேர்த்து கொள்ள வேண்டும் பின்னர் அதில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
  6. பின்னர் வறுத்த முந்திரியை சேர்க்க வேண்டும். இப்பொழுது சத்தான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.