கேரளா ஸ்பெஷல் சுவையான பழம் பொரி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: கேரளா டிஷ் என்றாலே அதற்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது கேரளாவில் செய்யப்படும் இந்த ஒரு இனிப்பு டிசைன் மிகவும் சுவையாகவும் அபார ருசி மிகுந்ததாகவும் இருக்கும் இது அங்குள்ளர்களால் பழம்பொரி என்று அழைக்கப்படுகிறது கேரளா பழம்பொரி மிகவும் சிறப்பான சுவையான ஒரு பொருளாகும் நாம் வாழக்காய் வைத்து பஜ்ஜி தான் போட்டிருக்கோம் ஆனால் இவர்கள் நேந்திரம் பழத்தை வைத்து சுவையான ஒரு உணவு பொருளை செய்கின்றார்கள்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பழம் பொரி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 2 நேந்திரம் பழம்
  • 1 cup மைதா மாவு அல்லது கோதுமை மாவு
  • 5 tbsp சீனி
  • ¼ cup அரிசி மாவு
  • ½ tsp மஞ்சள் தூள்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. பழம் பொரி செய்ய முதலில் மைதா மாவு, அரிசி மாவு, சீனி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் அதில் தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. பின் வாழைப்பழத்தை இரண்டாக வெட்டி அதை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  4. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைப்பழத்தை கலவையில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.பழம் பொரி ரெடி.