காரசாரமான சுவையில் தஞ்சாவூர் கௌசா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: தஞ்சாவூர் கவுசா என்பது மிகவும் காரசாரமான சுகமே இந்த உணவு பொருளாகும் இது பர்மாவை தாயமாக கொண்ட ஒரு உணவு பொருளாகும் இதனை நமது தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சாவூரில் இப்பொழுது மிகவும் சுவையாகவும் ருசியாகவும் மிகவும் பிரசித்தி பெற்றதுமாகவும் இருக்கிறது அதனால் பர்மா தாயகம் கொண்டிருந்த உணவு இன்று தஞ்சாவூர் கவுசா என்று மிகவும் பிரபலமாக அனைவராலும் அறியப்படுகிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தஞ்சாவூர் கவுசா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup நூடுல்ஸ்
  • 10 பூண்டு
  • 2 வெங்காயம்
  • ½ cup முட்டைக்கோஸ்
  • 7 மிளகாய் வற்றல்
  • 2 tbsp பொரிகடலை
  • 1 tbsp கடலைப்பருப்பு
  • 3 tbsp நல்எண்ணெய்
  • 1 cup புளிக்கரைசல்
  • தேவையான அளவு தண்ணீர்
  • உப்பு சிறிதளவு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. தஞ்சாவூர் கவுசா செய்ய முதலில் அடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நூடுல்ஸ் சிறிது புட் கலர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  2. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல் ஆறியதும் மிக்ஸி ஜாரில் நறுநறு என்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. புளியை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரில் கரைத்துக் எடுத்து கொள்ள வேண்டும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றாமல் பொரிகடலை, தொழி எடுத்த கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தடவை ஆரியுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  5. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து வறுத்து தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  6. அதே கடாயில் நறுக்கிய பூண்டை அதில் சேர்த்து வறுத்த பூண்டை தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  7. பின்னர் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், அரைத்த பொரிகடலை தூள்,மிளகாய் வற்றல் தூள், வறுத்த வெங்காயம், வறுத்த பூண்டு, புளித் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  8. சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரை சேர்க்க வேண்டும்.பின் கொத்தமல்லி இலையை போட வேண்டும்.இப்பொழுது சுவையான தஞ்சாவூர் கௌசா தயார்.