ஊர் மணக்கும் கிராமத்து அயிரை மீன் குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான அயிரை மீன் குழம்பு ஒன்று,இந்த சுவையான மட்டன் குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 300 gm அயிரை மீன்
  • 2 தக்காளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 15 பூண்டு
  • 7 மிளகாய் வற்றல்
  • 1 tsp மிளகு
  • ½ tsp சீரகம்
  • ¼ tsp மல்லி
  • 1 புளி
  • 1 cup துருவிய தேங்காய்
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கிராமத்து அயிரை மீன் குழம்பு செய்ய முதலில் புளி கரைசலை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் அயிரை மீனை சிறிது பால் ஊற்றி கொஞ்ச நேரம் அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால் மீனில் உள்ள கசடு எல்லாம் வெளியே வந்து விடும்.
  3. அயிரை மீன் வடிகட்டி சிறிது கல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
  4. அதன் பின் ஒரு கடாயில் மல்லி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  5. அவற்றுடன் சின்ன வெங்காயம் பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  6. பின் மிளகு, சீரகம் தனியே வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
  7. அதன் பிறகு புளி கரைசலில் மிளகாய் வற்றல் கரைசலை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.பின்னர் சீரகத்தூள் கரைசலை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.