காரசாரமான சுவையில் சாத்தூர் ஓமப்பொடி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பேக்கரிகளில் விற்கப்படும் சுவையான மிக்சர் என்றால் அதைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை அந்த மிக்சியில் வரும் ஓமப்பொடி இதுதான் காரசாரமாக இல்லாவிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் இதனை பால் சோற்றுடன் வைத்து சாப்பிட்டால் என் சுமையை மோகமாக இருக்கும் அல்லது நொறுக்கு தீனியாக சாப்பிட்டால் பொழுது சிறப்பாக போகும்,குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஓமப்பொடி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 3 cup கடலை மாவு
  • 1 cup அரிசி மாவு
  • ¼ tsp சோடா உப்பு
  • 1 tsp ஓமம்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • தண்ணீர் தேவையான அளவு
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 வாணலி
  • 1 பெரிய கண் கரண்டி

Steps:

  1. ஓமப்பொடி செய்ய முதலில் ஓமத்தை தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஓமத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு சட்டியில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, உப்பு, ஓமத் தண்ணீர் ஆகியவற்றை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
  3. அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  4. பின் ஓமப்பொடி பிழியும் அச்சில் பிசைந்த உருண்டைகளை சிறிது துண்டுகளாக எடுத்து அதில் வைத்து எண்ணெயில் பிழிந்து கொள்ள வேண்டும்.
  5. பின் சிறிது வெந்ததும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது சுவையான ஓமப்பொடி தயார்.