ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான இனிப்பு பிரட் டோஸ்ட் செய்து சுவையாக உண்ணலாம். இந்த மிக எளிமையாக செய்துவிட முடியும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிரட் டோஸ்ட் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.

Ingredients:

  • 7 பிரட்
  • 2 tbsp சீனி
  • 2 முட்டை
  • ¼ cup பால்
  • 2 tbsp நெய்
  • உப்பு சிறிதளவு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Steps:

  1. இனிப்பு பிரட் டோஸ்ட் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சீனியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  2. பிறகு முட்டையை நன்றாக வேறு ஒரு பாத்திரத்தில் கலந்து கொண்டு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. அதன் பின் பால் மற்றும் சீனி கலவையுடன் சேர்க்க வேண்டும்.மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தோசை கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைக்க வேண்டும்.
  4. பின் ஒவ்வொரு பிரெட் துண்டுகளாக எடுத்து கலவையில் இரண்டு புறமும் நன்றாக திருப்பி எடுத்து தோசை கல்லில் போட வேண்டும். சிறிது நெய்யை சேர்க்க வேண்டும்.
  5. அவ்வப்போது இருபுறமும் திருப்பிப் போட்டுக் கொள்ள வேண்டும். வெந்ததும் தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான இனிப்பு பிரட் டோஸ்ட் .