Summary: இனிப்பு என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் குறிப்பாக கடைகளில் விற்கப்படும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது, தேன்குழல் மிட்டாய் பல நிறங்களில் கிடைக்கிறது அதிலும் சர்க்கரைப்பாகு வைத்து செய்கிறார்கள் வெல்லப்பாக வைத்து செய்கிறார்கள் இதிலும் சிறப்பாக கருப்பட்டிப்பாக வைத்து செய்கிறார்கள் இதனை பல வழிமுறைகளில் செய்யலாம் எப்படி செய்தாலும் இதன் சுவை அமோகமாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேன்குழல் மிட்டாய் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.