தித்திக்கும் சுவையில் திருநெல்வேலி அல்வா இப்படி செஞ்சி பாருங்க!

Summary: அல்வா என்றாலே நாம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா தான் அதிலும் மஸ்கோத் அல்வா,ஜாம் அல்வா என்று நிறைய அல்வாக்கள் இருக்கிறது. ஆனால் அல்வா என்றதுமே நாம் எல்லோரும் திருநெல்வேலி அல்வாவை தானே நினைக்கிறோம். அல்வா செய்ய அதிக மணி நேரம் ஆகும்.ஆனால் சுவையில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. திருநெல்வேலி அல்வாவை பலவிதமாக பண்ணலாம். அப்படி ஒரு விதமாக திருநெல்வேலி அல்வா தயாராக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருநெல்வேலி அல்வா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup சம்பா கோதுமை
  • 1 cup நெய்
  • 10 முந்திரி
  • 5 cup சர்க்கரை
  • 1 tsp ஏலக்காய் தூள்
  • தண்ணீர்
  • உப்பு சிறிதளவு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. திருநெல்வேலி அல்வா செய்ய முதலில் முழு சம்பா கோதுமையை எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
  2. பிறகு முழு சம்பா கோதுமையை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் ஆட்டி கொள்ள வேண்டும். பின்பு ஆட்டிய கோதுமையை வடித்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்பு வடித்த கோதுமை தண்ணீரை 5 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் 5 மணி நேரம் கழித்து மேலே தெளிந்த தண்ணீரும் கீழே வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  4. மேலே உள்ள தண்ணீரை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு கீழே உள்ள கோதுமை மாவு வடிசிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  5. அந்தக் கோதுமை வடிசலை மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவின் படி தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  6. பின்அடுப்பில் இரும்பு கடாயாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி கோதுமை வடிசல்லை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  7. அதனில் கோதுமை கரைசலை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.பின் சிறிது நேரம் கழித்து கோதுமை கரைசல் கெட்டியான உடன் நெய் விட்டு கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  8. பின் கோதுமை கரைசல் அல்வா பதம் வந்தவுடன் மீதம் இருக்கின்ற நெய்யை அதில் சேர்த்து கிண்ட வேண்டும்.
  9. பின்னர் அதில் ஏலக்காய் தூள், வருத்த முந்திரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது சுவையான திருநெல்வேலி அல்வா ரெடி.