காரசாரமான ருசியில் மசாலா தோசை இப்படி செஞ்சி பாருங்க!

Summary: காலை உணவு இரவு உணவு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தோஷம் சாம்பார் சூடான தோசை நெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள் அருமையாக இருக்கும் அவ்வாறு அந்த தோசைக்குள் மசாலா வைத்து சாப்பிட்டால் அதன் சுவை நாக்கே நடனமாட வைக்கும்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மசாலா தோசை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.

Ingredients:

  • 2 cup தோசை மாவு
  • 2 உருளைக்கிழங்கு
  • ½ tsp கடுகு
  • ¾ tsp உளுத்தம் பருப்பு
  • 2 tsp கடலைப்பருப்பு
  • 2 வெங்காயம்
  • இஞ்சி சிறு துண்டு
  • 7 பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ½ tsp மிளகாய் தூள்
  • 2 tbsp நல்எண்ணெய்
  • தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Steps:

  1. மசாலா தோசை முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை வறுத்து கொள்ள வேண்டும்.
  3. அதனை அரைத்த இஞ்சி கலவையை சேர்க்க வேண்டும்.நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
  4. பின் வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் நான்கு கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
  5. அதனில் வெங்காயத்தை ஒரு 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். கலவை கொதி வந்ததும் அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக்கொண்டு சேர்க்க வேண்டும்.
  6. பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.தண்ணீர் வற்றியவுடன் கலவையை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  7. பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி தோசை ஊற்றி அதில் உருளைக்கிழங்கு மசாலாவை சேர்க்க வேண்டும்.
  8. ஒரு மூடிக்கொண்டு தோசையை மூட வேண்டும். தோசை வெந்ததும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான மசாலா தோசை ரெடி.