தூத்துக்குடி ஸ்பெஷல் சுவையான மக்ரூன் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பேக்கரி snacks என்றாலே நாம் அனைவருக்கும் கொள்ள இஷ்டம் இருக்கும் அதிலும் பேக்கரிகளில் செய்யப்படும் மக்ரூன் மிகவும் சுவை கொண்ட இனிப்பான ஒரு பொருளாக இருக்கும் பேக்கரியில் செய்யப்படும் இந்த மக்குரனை நமது வீட்டிலும் செய்து உண்டு மகிழலாம் சிறப்பான மக்ரூன் தூத்துக்குடியில் செய்யப்படுகிறது தூத்துக்குடி ஃபேமஸ் மக்ரூன் மற்றும் நமது வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூத்துக்குடி மக்ரூன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup முட்டை வெள்ளை கரு
  • 1 cup சீனி
  • ¾ cup முந்திரிப் பருப்பு
  • உப்பு

Equipemnts:

  • 1 மைக்ரோ ஓவன்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. தூத்துக்குடி மக்ரூன் செய்ய முதலில் முட்டையை மஞ்சள் கரு வெள்ளை கரு தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. பின்னர் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும் அதை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.முந்திரிப்பருப்பை மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை பீட்டர் கொண்டு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை கெட்டிப் பதம் வந்தவுடன் அதில் முந்திரிப் பருப்பு,சீனியை சேர்க்க வேண்டும்.
  4. பின் ஒரு பிளாஸ்டிக் கவரில் உண்மையில் சிறிது ஓட்டை போட்டு அதில் மக்ரோன் கலவையை ஊற்ற வேண்டும்.
  5. பின்னர் அதை ஓவன் தட்டில் வைத்து மக்ரோன் போல் செய்து கொள்ள வேண்டும்.பின் ஓவனில் ஒன்றரை மணி நேரம் நைட் எடுக்க வேண்டும்.இப்பொழுது சுவையான மக்ரோன் தயார்.