சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட்,சிக்கன் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் இதுவரை கண்டிராத சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • ¼ cup பச்சை பட்டாணி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 இஞ்சி
  • 15 gm கொத்தமல்லி இலை
  • 2 tsp மிளகாய் தூள்
  • 1 tbsp சோள மாவு
  • 2 tbsp நல்எண்ணெய்
  • ½ cup ப்ரெட் தூள்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Steps:

  1. சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் செய்ய முதலில் இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைக்க வேண்டும்.எப்பொழுதும் போல் வேக வைக்காமல் கொஞ்சம் மாவு பதம் போல் வேக வைக்க வேண்டும்.
  2. பின் வேகவைத்த சர்க்கரைவள்ளிகிழங்கை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் சர்க்கரை வள்ளி கிழங்குடன் வேகவைத்த பட்டாணி நறுக்கிய இஞ்சி,மிளகாய் தூள், சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்
  4. பச்சை மிளகாய்,சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.பின் சோளமாவை தண்ணீர் கலந்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கையில் வடை போன்று தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  6. அதை சோள மாவு தண்ணீரில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பிரட் தூள் பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.அதை தோசை சட்டியில் போட்டு பிரட்டி விட வேண்டும். இப்பொழுது சுவையான கட்லட் ரெடி.