கிராமத்து ஸ்டைல் பனை ஓலை கொழுக்கட்டை இப்படி செஞ்சி பாருங்க!

Summary: அனைவருக்கும் கொழுக்கட்டை என்றாலே பிடிக்கும் அதிலும் பனை ஓலை மூலம் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.அந்த காலம் முதல் இன்று வரை அனைவராலும் சுவைக்க விரும்பும் தின்பண்டங்களில் இதுவும் ஒன்று.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனை ஓலை கொழுக்கட்டை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • பனை ஓலை
  • 1 cup பச்சரிசி மாவு
  • ¼ cup துருவிய தேங்காய்
  • ¾ cup வெல்லம்
  • 1 tbsp பாசிப்பருப்பு
  • ½ tbsp கருப்பு எள்
  • தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் பாசிப்பருப்பை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சரிசி மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு கடாயில் தேங்காய் துருவலை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சரிசி மாவு, வறுத்த பாசிப்பருப்பு,எள், வதக்கிய தேங்காய் துருவல், காய்ச்சிய வெல்லப்பாகு ஆகியவற்றை சப்பாத்தி மாவு பதம் போல் பிசைய வேண்டும்.
  4. அதன் பின் இசைந்த மாவை சிறு துண்டை எடுத்து அதை பனை ஓலையில் வைத்து மூடி வைக்க வேண்டும்.
  5. பின் இட்லி பாத்திரத்தில் இட்லி வேக வைப்பது போல் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் இட்லிதுணி வைக்காமல் தயார் செய்து வைத்திருக்கின்ற பனை ஓலை கொழுக்கட்டைகளை அதில் வேக வைக்க வேண்டும்.
  6. அதனை கால் மணி நேரம் வேக வைக்க வேண்டும். இப்பொழுது சூடான பனை ஓலை கொழுக்கட்டை ரெடி.