திருநெல்வேலி சுவையான சொதி குழம்பு! இப்படி செஞ்சி பாருங்க

Summary: வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சொதி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இன்று இந்த சொதி குழம்பு எப்படி செய்வது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொதி குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ cup பச்சை பட்டாணி
  • ¼ cup கேரட்
  • ¼ cup முருங்கைக்காய்
  • ½ cup முருங்கை பீன்ஸ்
  • ¼ cup உருளைக்கிழங்கு
  • ¼ cup இஞ்சி விழுது
  • ¼ cup பாசிப்பருப்பு
  • ¼ tsp கடுகு
  • 5 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 4 பூண்டு
  • 1 cup தேங்காய்ப்பால்
  • தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. சொதி குழம்பு செய்ய முதலில் காய்கறிகளை சிறிது துண்டுகளாக நறுக்காமல் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
  2. பின் பாசிப்பருப்பை குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த பாசிப்பருப்பை நன்கு குலைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கிக் கொள்ள வேண்டும்.
  4. அதன் பின் வேக வைத்த காய்கறி கலவையை சேர்க்க வேண்டும். கலவைக்கு தேவையான உப்பை சேர்க்க வேண்டும்.
  5. பின்னர் இஞ்சி விழுதை சேர்த்த பின் குலைய வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலவையை மிதமான தீயில் இந்த நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  6. அதனை தேங்காய் சில்லை அரைத்து எடுத்து அதனை சிறிது தண்ணீர் ஊற்றி வடித்த முதல் தேங்காய் பாலை கலவையில் உற்ற வேண்டும்.
  7. பின் தேங்காய் பால் ஊற்றியவுடன் கலவை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.ம் இப்பொழுது சுவையான சொதி குழம்பு தயார்.