கறி குழம்புக்கு இனையான சுவையில் கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி ?

Summary: நாம் வாரம் ஒரு முறை கருப்பு கொண்டை கடலையை உணவாக எடுத்துக் கொள்வதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருக்கும். மேலும் கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. இவ்வளவு மகத்தான சத்துக்களையும், பயன்களையும் நமக்கு தரும் கருப்பு கொண்டைக்கடலையை தான் இன்று கறி குழம்புக்கு இணையான சுவையில் செய்யப் போகிறோம். கருப்பு கொண்டைகடலை குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp மிளகாய்தூள்
  • ½ tbsp சீரகத்தூள்
  • 2 tbsp மல்லித்தூள்
  • 2 tbsp செட்டிநாடு மசாலா
  • தேங்காய் எண்ணெய்
  • 1 tbsp சோம்பு
  • 1 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • உப்பு
  • 1 கப் கொண்டைக்கடலை
  • கொத்தமல்லி
  • 1 ½ கப் கொண்டக்கடலை ஊற வைத்த தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் இதனுடன் கருவேப்பிலை, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், செட்டிநாடு மசாலா, கசகசா சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  2. தேங்காய் துருவல் நன்றாக வதங்கி வந்ததும் தனியாக ஒரு பவுளில் எடுத்து குளிர வையுங்கள். பின் குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  3. எண்ணெய் சூடேறியதும் அதில் சோம்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும், தக்காளி மசிந்து வரும் அளவு வதக்கி கொள்ளுங்கள். அதன்பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு உப்பும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி எடுங்கள்.
  5. பின் நம் வறுத்து வைத்துள்ள தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பேஸ்ட்டை குக்கரில் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள் மசாலா நன்கு கொதித்து வந்தவுடன்.
  6. நாம் வைத்திருக்கும் கொண்டக்கடலையும் இதோடு சேர்த்து கிளறி விடவும். பின் இரண்டு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து பின் கொண்டக்கடலை ஊற வைத்த நீர் தேவையான அளவு ஊற்றி குக்கரை மூடி விடுங்கள். நான்கு விசில் வரும் வரை குக்கரை அடுப்பில் வைத்து விட்டு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி பிரஷரை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள்.
  7. கொண்டைக்கடலை நன்றாக வெந்து குழம்பு மணமாக வந்திருக்கும் இதனுடன் சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் கொத்தமல்லி தூவி விடுங்கள். அவ்வளவுதான் கறி குழம்பு இணையான கொண்டைக்கடலை குழம்பு இனிதே தயார்ஆகிவிட்டது.