டீ கடை கார வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: வடை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று அதிலும் நமது டீக்கடைகளில் செய்யப்படும் கார வடை பிரியர்களுக்கு மிகவும் அலாதி பிரியமாக உள்ளது. தீ பிரியர்கள் அனைவருக்கும் டீக்கடையில் பிடித்த மிகவும் பிடித்த ஒரு வடைகளில் காரவடையும் ஒன்று இதனுடன் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காரவடை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup கடலை பருப்பு
  • ¼ cup உளுத்தம் பருப்பு
  • ½ cup அரிசி மாவு
  • 1 வெங்காயம்
  • ¼ tsp சோம்பு
  • இஞ்சி சிறு துண்டு
  • பொரிக்க எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கரா வடை செய்ய முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு கழுவி எடுத்துக்கொண்டு அதை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. பருப்பு ஊறியவுடன் கிரைண்டரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, அரிசி மாவு, இஞ்சி, சோம்பு,கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து செய்து கொள்ள வேண்டும்.
  4. அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான கார வடை தயார்.