ஆந்திரா ஸ்டைல் காரசாரமான தந்தூரி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: தந்தூரி சிக்கன் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா.நான் வேக பிரியர்கள் இந்த சிக்கன்னை வாரம் ஒரு முறையாவது சுவைத்து மகிழ்வார்கள். வீட்டிலேயே செய்தால் இன்னும் சுவை கூடும். அப்படி நீங்கள் வீட்டிலேயே உங்கள் கை வண்ணத்தில் சுலபமாக செய்து குடும்பத்துடன் தந்தூரி சிக்கன்னை உண்டு மகிழுங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தந்தூரி சிக்கன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 4 சிக்கன் லெக் பீஸ்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1½ tsp மிளகாய் தூள்
  • 1 tsp மல்லித்தூள்
  • ½ tsp கரம் மசாலா
  • ½ tsp சிக்கன் மசாலா
  • 2 tbsp தயிர்
  • 1 எலுமிச்சம் பழம்
  • பொரிக்க எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. தந்தூரி சிக்கன் செய்ய முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கலந்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. அதன் பிறகு சிக்கன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா, கரம் மசாலா, தயிர் ஆகியவற்றை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
  3. அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின் பிரட்டிய சிக்கனை குறைந்தது இரண்டு மணி நேரம் ஆவது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  4. குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் அல்லது வெளியேவே வைத்திருக்க வேண்டும்.
  5. பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரட்டிய சிக்கனை கடாயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
  6. அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும்.சிக்கன் பாதி வெந்ததும் மறுபுறம் திருப்பி வேக வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான தந்தூரி சிக்கன் தயார்.