காரசாரமான ருசியில் காளான் பெப்பர் ப்ரை இப்படி செஞ்சி பாருங்க!

Summary: காளான் பெப்பர் ஃப்ரை என்பது மிகவும் காரசாரமான சுவை மிகுந்த ஒரு உணவு பொருளாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும் சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும் இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசரி செய்யத் தோணும் அந்த அளவிற்கு சுவையான ஒரு உணவாகும் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காளான் பெப்பர் ப்ரை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த காளான் பெப்பர் ப்ரை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 cup காளான்
  • ½ tsp கடுகு
  • 1 வெங்காயம்
  • இஞ்சி சிறு துண்டு
  • 5 பூண்டு
  • ½ tsp சீரகம்
  • 1 tbsp மிளகு
  • ½ tsp சோம்பு
  • 2 tbsp நல்எண்ணெய்
  • தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் கடாயில் எண்ணெய் இல்லாமல் சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் கலவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து சிறியதாக நறுக்கிய இஞ்சி, சிறு சிறு துண்டுகளாக கட் செய்த பூண்டு ஆகியவற்றை வதுக்கிக் கொள்ள வேண்டும்.
  4. சிறியதாக கட் செய்த வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய காளான் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  5. பின்னர் அரைத்து வைத்த பொடியை காளான் கலவையில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி காளான் கலவையை வேக விட வேண்டும்.
  6. பின்னர் காளான் கலவையில் தண்ணீர் வற்றியதும் சிறிது அரைத்து வைத்த பொடியை மேலே தூவி இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான காளான் பெப்பர் ஃப்ரை தயார்.