ருசியான நெல்லை ஸ்பெஷல் சுறா மீன் புட்டு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!

Summary: சுவையான சுறா மீன் புட்டு பொதுவாக மீனை வறுக்கவும், பொரிக்கவும் செய்யலாம் ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று பிஷ் பிங்கர் போன்றவற்றைச் செய்கிறோம். ஆனால் இப்போது கிராமத்து பாணி சூரா புட்டு, இதையெல்லாம் விட ருசியாக இருக்கும்.தாய்க்கு பால் சுரக்க இந்த முறை சுறா மீன் புட்டு செய்து கொடுப்பர். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் நல்லது. சுறா மீன் புட்டு என்பது சுறா மீனை வேகவைத்து வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களுடன் செய்யப்படும் சுவையான உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுறா மீன் புட்டு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 500 gm மீன்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 வெங்காயம்
  • ¾ tsp மிளகாய்த்தூள்
  • ¾ tsp தனியாத்தூள்
  • ¾ tsp தேங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 மஞ்சள் முட்டை
  • ½ கடுகு
  • 1 உளுத்தம் பருப்பு
  • புளி
  • 1 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. சுறா மீன் புட்டு செய்ய முதலில் மீனை உப்பு, மஞ்சள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு புளியைக் கரைத்து விட்டுப் வேகவிட்டு எடுக்கவும். வெங்காயத்தைப் பொடிப் பொடியாக வெட்டவும். தேங்காயைத் துருவவும்.
  2. பின்னர் மீனில் உள்ள முட்களை முழுவதுமாக அகற்றிவிடவும். பிறகு, மீனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள் இவற்றுடன் முட்டை சேர்த்து நன்கு பிசையவும்.
  3. அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் காய்ந்த் மிளகாய் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலை, வெட்டிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  4. அதன்பின்னர், மீன் கலவையைக் கொட்டி உதிரக் கிளறவும். நன்கு உதிர்ந்து வந்ததும் தேங்காய்ப்பூ போட்டு மேலும் சற்று நேரம் கிளறி இறக்கவும். சுவையான  சுறா மீன் புட்டு ரெடி