சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செஞ்சி பாருங்க!

Summary: எவ்வளவுதான் இனிப்பு வகைகள் இருந்தாலும் இந்த போளிக்கு இணையாக முடியுமா. மிகவும் குறுகிய நேரத்தில் சுவையான போளி தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைக்கலாம். அதே நேரத்தில் கொடுக்கக் கூடிய பொருட்களும் மிகவும் குறைவானது தான் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகும் அப்படி உங்களுக்கு மைதா போளி வேண்டாம் என்றால் மைதாவுக்கு பதில் கோதுமையில் கூட போளி செய்யலாம் அது இன்னும் சத்து வாய்ந்ததா இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடலைப்பருப்பு வெல்லம் போளி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup மைதா
  • 1 cup கடலைப்பருப்பு
  • ½ cup வெல்லம்
  • ½ cup துருவிய தேங்காய்
  • 50 gm நெய்
  • தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Steps:

  1. கடலைப்பருப்பு வெல்லம் போளி முதலில் மைதா மாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைய வேண்டும்.பின் மாவை சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  2. பின் கடலைப்பருப்பை குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இரண்டு விசில் வைக்க வேண்டும்.கடலை பருப்பு குழையாமல் இருக்க வேண்டும்.
  3. பின்னர் வேக வைத்த கடலைப்பருப்பை வடித்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும்.
  4. பின் ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த கடலைப்பருப்பு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.பின் வெல்லத்தை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  5. பின்னர் அரைத்தவற்றை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதே மிக்ஸி ஜாரில் தேங்காய் சில்லை அடித்து தேங்காய் துருவலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  6. பின் கடலைப்பருப்பு கலவையுடன் தேங்காய் துருவலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது பூரணம் தயார்
  7. அடுப்பில் தோசை கல்லை சிறிது எண்ணெய் ஊற்றி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
  8. பின்னர் பிசைந்த வைத்துள்ள மாவை வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் சிறிது எண்ணெய் ஊற்றி தடவி சப்பாத்தி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  9. அதில் சிறு உருண்டையை எடுத்து தட்டி அதில் பூரணத்தை வைத்து மூடிவைத்து வாழை இலையில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
  10. பின் தட்டி வைத்த மாவை தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது சூடான கடலைப்பருப்பு வெல்லம் போளி போளி ரெடி.