சுவையான கிரிஸ்பி ஹனி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: ஹனி சிக்கன் ஒரு சீன உணவாகும். வழக்கம் போல் இல்லாமல் மிக வேறுபட்ட சுவையை கொண்டிருக்கும். இந்த உணவை செய்து உண்டு மகிழுங்கள். ஒரே மாதிரி சிக்கன் சமைப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு ஹனி சிக்கன் செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக இருக்கும். மணிக்கணக்காக மிருதுவாக இருக்கும் ஹனி சிக்கன்,சிக்கன் பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. புலாவுக்கு சைடிஷ் ஆகவும் இதைத் தொட்டு சாப்பிடலாம். அத்தனை அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிரிஸ்பி ஹனி சிக்கன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.

Ingredients:

  • ½ kg எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி
  • 5 tbsp வெண்ணை
  • ½ cup சோளமாவு கரைசல்
  • சமையல் சோடா
  • 1 வெள்ளை கரு
  • 2 tbsp எண்ணெய்
  • 2 tsp நறுக்கிய பூண்டு
  • 3 tsp நறுக்கிய இஞ்சி
  • 1 tsp வினிகர்
  • 3 tbsp honey
  • ½ cup தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கிரிஸ்பி ஹனி சிக்கன் செய்ய முதலில் மாவு செய்வதற்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களை சிக்கனஉடன் சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.
  2. அதன் பின் 30 நிமிடங்கள் கழித்து அதனோடு சிக்கன் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும்.
  3. வானலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி மற்றும் பூண்டினை வதக்க வேண்டும்.
  4. அதனோடு உப்பு, தேன், வினிகர் மற்றும் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  5. அதனோடு சோள மாவு கரைசலை சேர்த்து சிறிது நேரம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும்.
  6. இந்த கலவையை பொறித்து வைத்த சிக்கனுடன் சேர்த்து பரிமாற வேண்டும்.சுவையான கிரிஸ்பி ஹனி சிக்கன் ரெடி.