காரசாரமான செட்டிநாடு வஞ்சிர மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: மீன் பிரியர்களுக்கு மீன் என்றாலே அழகு கடந்த குஷி தான் அதிலும் வறுவல் என்றால் இன்னும் குஷி தான் அதிலும் வஞ்சிர மீன் வறுவல் என்றால் கேட்கவா வேண்டும் ஆகவே வஞ்சிரம் மீன் வருவல் மீன் பிரியர்களுக்கு பிடித்த உணவாகும். வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய அதிக நேரம் தேவைப்படாதுமசாலாவை பிரட்டி மீன் மேல் தடவி சில மணி நேரங்கள் வைத்தாலே போதும்பின் அதை தோசை சட்டியில் போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான வஞ்சிரம் மீன் வறுவல் தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வஞ்சிரம் மீன் வறுவல் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 4 pieces வஞ்சிரம் மீன்
  • ½ மஞ்சள் தூள்
  • 2 மிளகாய் தூள்
  • ½ மல்லித்தூள்
  • 1 மிளகுத்தூள்
  • 1 இஞ்சி பூண்டு விழுது
  • ½ எலுமிச்சம் பழம்
  • பொரிக்க எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Steps:

  1. வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய முதலில் வஞ்சிரம் மீன் துண்டுகளை நன்றாக கழுவ வேண்டும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு எண்ணெயை சேர்க்க வேண்டும்.
  4. பின்னர் வஞ்சர மீனில் கலந்து வைத்துள்ள மசாலா கலவையை தடவ வேண்டும். மீனை ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  5. பின்னர் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்த மீனை பொரித்தெடுக்க வேண்டும்.
  6. அவ்வப்பொழுது மீனை திருப்பி விட்டுக் கொள்ள வேண்டும். இப்பொழுது எல்லோருக்கும் பிடித்தமான வஞ்சரம் மீன் வறுவல் தயார்.