ருசியான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பன்னீர் கட்லெட் சாண்ட்விச் என்பது ஒரு சுவையான ஃபிங்கர் ஃபுட் ஆகும், அதில் ஒரு பனீர் கட்லெட்டுடன் பாலாடைக்கட்டி போடப்பட்டிருக்கும். எளிதான விருந்துக்கு பரிமாறுவது சிறந்தது.வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் பன்னீர் கட்லெட் சாண்ட்விச் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பன்னீர் கட்லெட் சாண்ட்விச் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup பனீர்
  • 1 tbsp சில்லி ஃப்ளேக்ஸ்
  • ½ tbsp மிளகு தூள்
  • 1 tbsp வெண்ணெய் சாண்ட்விச்களுக்கு
  • 4 ரொட்டி துண்டுகள்
  • 2 சீஸ் துண்டுகள்
  • 2 tbsp பீஸ்ஸா சாஸ்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. பனீர் கட்லெட் செய்ய முதலில் பனீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக அரைக்க வேண்டும்..சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலக்க வேண்டும்.
  2. அதனை மென்மையான நன்கு கலந்த மாவைப் பெறும் வரை தொடர்ந்து பிசையவும்.சம பாகங்க ளாகப் பிரித்து, உங்கள் உள்ளங்கையில் நீள்வட்ட அல்லது வட்ட வட்டுகளாக தட்ட வேண்டும்.
  3. பின் நான்ஸ்டிக் கடாயை வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதன் மேல் டிக்கிகளை வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.
  4. பிறகு சாண்ட்விச்களை அசெம்பிள் செய்யபிட்சா சாஸை பிரெட் துண்டுகளின் மீது பரப்பவும்.
  5. ஒரு ஸ்லைஸில் இரண்டு கட்லெட்டுகளை வைக்கவும், அதன் மேல் தேவைக்கேற்ப சீஸ் துண்டுகளை வைக்கவும்.
  6. அதன் பின்னர் மற்ற பிரட் ஸ்லைஸை இதன் மேல் வைத்து நன்றாக அழுத்தவும்.சூடான திறந்த பாத்திரத்தில் இருபுறமும் மிருதுவாக மாறும் வரை வறுக்கவும்.சுவையான பனீர் கட்லெட் சாண்ட்விச் ரெடி