Summary: மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, முழுதாக வேக வைத்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான சிற்றுண்டி! இதில் கருப்பட்டி சேர்த்திருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் தரும். குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டி மோதகம் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.